இணையவழி புகாரளிக்கும் அமைப்பைப் பயன்படுத்தும் போது எனது தரவு எவ்வாறு பாதுகாக்கப்படும்?
தரவுப் பாதுகாப்பு ஏற்பாடுகள் - இணையவழி புகாரளிக்கும் அமைப்பு
எங்களுக்குத் தரவுப் பாதுகாப்பு மிகவும் முக்கியமானதாகும்
உங்கள் தனிப்பட்ட தரவின் பாதுகாப்பை நாங்கள் மிகவும் தீவிரமாக எடுத்துக்கொள்கிறோம். நீங்கள் இந்த இணையதளத்தைப் பார்வையிடும்போது அல்லது ஒரு மீறலைப் பற்றி புகாரளிக்கும்போது எந்த தனிப்பட்ட தரவை நாங்கள் செயலாக்குகிறோம் என்பதை பின்வரும் தரவு தனியுரிமை அறிவிப்பு உங்களுக்குத் தெரிவிக்கும்.
1. உறுப்புரை. 4 எண் 7 GDPR -இன் அர்த்தத்திற்குள் வரும் கட்டுப்படுத்தி
உறுப்புரை.4 எண் 7 GDPR -இன் அர்த்தத்திற்குள் வரும் தரவைச் செயலாக்கும் தரவுக் கட்டுப்படுத்தி என்பது நீங்கள் ஒரு மீறலைப் புகாரளிக்கும் போது உங்களுக்குச் சுட்டிக்காட்டப்படும் தரவுப் பெறுநர் ஆகும்.
2. இணையவழி புகாரளிக்கும் அமைப்பு/இணக்கத் துறையைத் தொடர்புகொள்ளல் மூலம் மீறல்களைப் புகாரளித்தல்
தரவுச் செயலாக்கத்தின் நோக்கம் மற்றும் சட்ட அடிப்படை
இந்த இணையவழி புகாரளிக்கும் அமைப்பு இணக்கம் தொடர்பான விடயங்களைப் புகாரளிக்க அமைக்கப்பட்டது. குற்றவியல் அபராதங்கள் அல்லது நிர்வாக அபராதங்கள் உட்பட நிறுவனத்திற்குக் கடுமையான பின்விளைவுகளை ஏற்படுத்தக்கூடிய சாத்தியமான இணக்க மீறல்களைப் புகாரளிக்க இதை நீங்கள் பயன்படுத்த முடியும்.
இணக்கத் துறை பணியாளர்கள் மூலம் பதில் பெற விரும்புகின்ற இணக்கம் தொடர்பான விடயங்களில் குறிப்பிட்ட கேள்விகள் உங்களுக்கு இருந்தால், நீங்கள் இணையவழி புகாரளிக்கும் அமைப்பையும் பயன்படுத்த முடியும்.
உறுப்புரை. 6 (1) வாசகம் 1 f) GDPR என்ற சட்டவிதி இந்தத் தரவுச் செயலாக்கத்திற்கான சட்ட அடிப்படையாக உள்ளது.
செயலாக்கப்பட்ட தரவு வகை
இணையவழி புகாரளிக்கும் அமைப்பின் பயன்பாடு தன்னார்வமானது. நாங்கள் செயலாக்கும் தரவு நீங்கள் எங்களுக்கு வழங்கும் தகவலைப் பொறுத்தமையும். நாங்கள் வழக்கமாகப் பின்வரும் தரவுகளைச் செயலாக்குகிறோம்:
- உங்கள் பெயர் மற்றும் தொடர்பு விவரங்களை நீங்கள் எங்களுக்கு வழங்கியிருந்தால், அந்தத் தகவல்கள்.
- நீங்கள் எங்களிடம் தெரிவிக்க விரும்பினால், நீங்கள் எங்களுடன் பணிபுரிகிறீர்களா இல்லையா என்பது.
- நீங்கள் எங்களிடம் என்ன புகாரளிக்கிறீர்கள் என்பதைப் பொறுத்து, தனிநபர்களின் பெயர்கள் மற்றும் ஒரு நபருடன் தொடர்புடைய பிற தனிப்பட்ட தரவு.
பெறுநர்கள்/ பெறுநர்களின் வகைப்பாடுகள்
நீங்கள் எங்களுக்கு அனுப்பிய தரவு, கட்டுப்படுத்தியால் இணக்கத் துறையில் மட்டுமே செயலாக்கப்படுகிறது. கொள்கையின்படி, மூன்றாம் தரப்பினருக்கு தரவை வெளிப்படுத்துவதை நாங்கள் நிராகரிக்கிறோம். விடயத்தை விசாரணை செய்ய வேண்டிய அவசியம் ஏற்பட்டால், நீங்கள் எங்களுக்கு அனுப்பிய தரவைக் கட்டுப்படுத்திக்குள் உள்ள பிற துறைகளுடன் அல்லது மற்ற Schwarz குழும நிறுவனங்களுடன் நாங்கள் பகிர்ந்து கொள்ள வேண்டியிருக்கலாம்.
எங்கள் சார்பாகத் தரவு இந்த இணையவழி புகாரளிக்கும் அமைப்பின் ஆபரேட்டரான EQS Group GmbH, Bayreuther Strasse 35, 10789 Berlin, Germany போன்ற செயலாக்கிகளாலும் செயலாக்கப்படுகிறது. இந்தச் செயலாக்கி மற்றும் ஏதேனும் பிற செயலாக்கிகள் கவனமாகத் தேர்ந்தெடுக்கப்படுகின்றன, மேலும் அவை தணிக்கை செய்யப்பட்டு உறுப்புரை. 28 GDPR -இற்கு இணங்க ஒப்பந்தத்தால் பிணைக்கப்படுகின்றன.
குற்றம் சாட்டப்பட்ட தனிநபருக்கு, புகாரின் விசாரணையில் இனி தலையிட மாட்டார் என்ற நிலை ஏற்பட்ட உடனே, அவர் தொடர்பான ஒரு புகாரை நாங்கள் பெற்றுள்ளோம் என்பதை அவரிடம் உடனடியாகத் தெரிவிக்க நாங்கள் சட்டப்பூர்வமாகக் கடமைப்பட்டுள்ளோம். இருப்பினும், சட்டப்பூர்வமாக அனுமதிக்கப்படும் அளவிற்கு, யாருக்கு எதிராக இணக்கம் தொடர்பான குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டதோ அந்த நபருக்கு ஒரு விசில்-ப்ளோயர் என்ற உங்கள் அடையாளம் வெளிப்படுத்தப்பட மாட்டாது.
சேமித்து வைக்கும் காலம்/ சேமித்து வைக்கும் காலத்தைத் தீர்மானிப்பதற்கான அளவுகோல்கள்
மேற்கூறிய நோக்கங்களைப் பூர்த்திசெய்வதற்குத் தேவையான காலம் வரை தரவு சேமிக்கப்படுகிறது, அதாவது புகாருக்கான விசாரணையை முடிக்கவும், புகாரின் தன்மை, அதன் தோற்றம் மற்றும் புகாரை மேற்கொள்ளப் பயன்படுத்தப்படும் தகவல்தொடர்பு ஊடகம் பற்றிய அநாமதேய புகாரை மேற்கொள்ளவும் சேமிக்கப்படுகிறது. மேலும் பொருந்தக்கூடிய சட்டத்தின் கீழ் அவசியம் எனும் பட்சத்திலும் தரவு சேமிக்கப்படுகின்றது. இந்தக் காலஅளவை நிர்ணயிக்கும் அளவுகோல்களில் புகாரளிக்கப்பட்ட விடயத்தின் சிக்கல் தன்மை, அதை விசாரணை செய்ய எடுக்கும் காலம் மற்றும் குற்றச்சாட்டின் விடயப் பொருள் ஆகியவை அடங்கும். சேகரிப்புக்கான நோக்கம் நிறைவேறியவுடன் தரவு நீக்கப்படும்.
3. இணையவழி புகாரளிக்கும் அமைப்பின் பயன்பாடு
உங்கள் சாதனத்திற்கும் இணையவழி புகாரளிக்கும் அமைப்புக்கும் இடையேயான தகவல்தொடர்பு மறைகுறியாக்கப்பட்ட ஒரு இணைப்பு (SSL) வழியாக நடைபெறுகிறது. உங்கள் IP முகவரி சேமிக்கப்பட மாட்டாது. ஒரு அமர்வு ID-ஐ கொண்ட குக்கீ (அமர்வுக்கான குக்கீ) உங்கள் கணினியில் இணையவழி புகாரளிக்கும் அமைப்பிற்கான இணைப்பைப் பராமரிக்கும் நோக்கத்திற்காக மட்டுமே சேமிக்கப்படுகிறது. இந்த குக்கீ உங்கள் அமர்வின் காலத்திற்குச் செல்லுபடியாகும், பின்னர் அது நீக்கப்படும்.
4. தரவுப் பொருளாக உங்கள் உரிமைகள்
உறுப்புரை. 15 (1) GDPR -இற்கு இணங்க, கட்டுப்படுத்தியின் அமைப்பில் சேமிக்கப்பட்டுள்ள உங்களைப் பற்றிய தனிப்பட்ட தரவு பற்றிய தகவல்களைக் கோரிக்கையின் பேரில் இலவசமாகப் பெறுவதற்கான உரிமை உங்களுக்கு உண்டு.
சட்டப்பூர்வ தேவைகள் பூர்த்தி செய்யப்பட்டால், உங்கள் தனிப்பட்ட தரவைத் திருத்தவும், அழிக்கவும், செயலாக்கத்தைக் கட்டுப்படுத்தவும் உங்களுக்கு உரிமை உண்டு.
உறுப்புரை. 6 (1) e) அல்லது f) GDPR அடிப்படையில் தரவு செயலாக்கப்பட்டால், அதை எதிர்ப்பதற்கு உங்களுக்கு உரிமை உள்ளது. தரவுச் செயலாக்கத்திற்கு நீங்கள் ஆட்சேபனை தெரிவித்தால், தரவுப் பொருளின் ஆர்வத்தை விட மேலாகச் செயலாக்கத்திற்கான கட்டாயமான சட்டபூர்வமான காரணங்களைக் கட்டுப்படுத்தி நிரூபிக்கும் வரை அது எதிர்காலத்தில் செயலாக்கப்படாது.
நீங்களே தரவை வழங்கியிருந்தால், உங்களுக்குத் தரவுப் பெயர்வுத்திறனுக்கான உரிமை உள்ளது.
உறுப்புரை.6 (1) a) அல்லது Art. 9 (2) a) GDPR -இற்கு இணங்க உங்கள் ஒப்புதலின் அடிப்படையில் தரவு செயலாக்கப்பட்டால், முன்கூட்டிய செயலாக்கத்தின் சட்டப்பூர்வமான தன்மையைப் பாதிக்காமல் எதிர்காலத்தில் அமுலுக்கு வரும் வகையில் எந்த நேரத்திலும் உங்கள் ஒப்புதலை நீங்கள் திரும்பப் பெறலாம்.
மேற்குறிப்பிடப்பட்ட சந்தர்ப்பங்களில், உங்களுக்கு மேலும் ஏதேனும் கேள்விகள் இருந்தால் அல்லது புகாரளிக்க விரும்பினால், தயவுசெய்து எங்கள் தரவுப் பாதுகாப்பு அதிகாரியை எழுத்து மூலமாகவோ அல்லது மின்னஞ்சல் மூலமாகவோ தொடர்பு கொள்ளவும்; பிரிவு 5 -ஐப் பார்க்கவும்.
தகுதிவாய்ந்த தரவுப் பாதுகாப்பு மேற்பார்வை ஆணையத்திடம் புகாரளிப்பதற்கும் உங்களுக்கு உரிமை உள்ளது.
5. தரவுப் பாதுகாப்பு அதிகாரியைத் தொடர்பு கொள்ளல்
உங்கள் தரவைச் செயலாக்குவதில் அல்லது உங்கள் உரிமைகளைப் பயன்படுத்துவதில் உங்களுக்கு ஏதேனும் கேள்விகள் இருந்தால், அதற்குப் பொறுப்பான கட்டுப்படுத்தியின் தரவுப் பாதுகாப்பு அதிகாரியை நீங்கள் தொடர்புகொள்ள முடியும்:
- Kaufland Stiftung & Co. KG
z.Hd. Datenschutzbeauftragter
Rötelstraße 35
74172 Neckarsulm
Deutschland
datenschutz@kaufland.com
- ”Кауфланд България ЕООД енд Ко“ КД
Ул. „Скопие“ 1А
София 1233
България
dataprotection@kaufland.bg
- Kaufland Romania SCS
Str. Barbu-Vacarescu 120-144
Sect.2. Bucuresti
România
protectiadatelor@kaufland.ro
- Kaufland Hrvatska k.d.
Službenik za zaštitu podataka
Donje Svetice 14
10 000 Zagreb
Hrvatska
மின்னஞ்சல்: gdpr@kaufland.hr
- Kaufland Česká republika v.o.s.
Právo a Compliance
Bělohorská 2428/203
169 00 Praha 6
Česká republika
oou@kaufland.cz
- Kaufland Slovenská republika v.o.s.
Právo a Compliance
Adresa: Trnavská cesta 41/A, 831 04 Bratislava
Slovenská
dataprotection@kaufland.sk
- Kaufland Polska Markety sp. z o.o. sp. k.
Al. Armii Krajowej 47
50-541 Wrocław
Polska
daneosobowe@kaufland.pl